த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளர் விருது!

மேலும் படங்கள் நடிகை த்ரிஷாவுக்கு பெண் சாதனையாளருக்கான விருதினை வழங்குகிறது ஒரு பேஷன் பத்திரிகை. தமிழ், தெலுங்கு சினிமாவில் பத்தாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இப்போதும் ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். த்ரிஷாவின் திரையுலக சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பெண் சாதனையாளர் விருதினை வழங்குகிறது ஜேஎப்டபிள்யூ பத்திரிகை. மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது த்ரிஷாவுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்வையும் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது," என்றார். த்ரிஷாவுடன் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா, பாடகி சுஜாதா உள்ளிட்டோரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.