மதன் கார்க்கி, குறுகிய காலத்திலேயே 100 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டார்.
மதன் கார்க்கி, குறுகிய காலத்திலேயே 100 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டார். வந்த வேகத்திலேயே, மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி, முன்னணி இடத்தையும் பிடித்து விட்டார். இந்நிலையில், ஷங்கரின், 'எந்திரன், நண்பன் படங்களுக்கு வசனமும் எழுதியுள்ள மதன் கார்க்கி, இப்போது, 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ராஜமவுலி இயக்கும் புதிய படம் உட்பட, சில படங்களுக்கும் வசனம் எழுதி வருகிறார். 'வசனம் எழுதுவதால், பாடல் எழுதுவதற்குஎந்த கஷ்டமும் ஏற்படவில்லை. பாடல் - வசனம் இரண்டையும் மாறி மாறி எழுதுவதால், எனக்கான தேடல் அதிகரிக்கிறது. அதனால், தொடர்ந்து இவ்விரு பாதைகளிலும் பயணிப்பேன் என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.