'கும்கி நாயகன் விக்ரம் பிரபு, 'இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்புக்கேற்ப, தன்னை வேற மாதிரிஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்த வேண்டும் என்று, ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் விக்ரம் பிரபு. அதற்காக, டைரக்டர் கூறியது போல் மாதக்கணக்கில் கடும் உடற்பயிற்சி செய்து, தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கும் அவர், சண்டை காட்சிகளில் கூடுதல் வேகம் காட்டுகிறாராம். குறிப்பாக, பதினைந்து மாடி கட்டடத்தின் மேல் நடந்த சண்டை காட்சியில் டூப் பயன்படுத்தாமல் துணிச்சலாக நடித்து வருகிறாராம். 'இந்த ரிஸ்க் தேவைதானா என்று கேட்டால், 'கதைக்கு தேவையான ரிஸ்க் எடுத்து நடிப்பது, தேவையான ஒன்றுதான். அதிலும், டூப் இல்லாமல் எல்லா காட்சிகளிலும் நாமாக இருப்பது மனநிறைவை தருகிறது என்கிறார் விக்ரம் பிரபு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.