செவ்வாய், மார்ச் 05, 2013

சிம்புவின் லவ் ஆந்தம் பாணியில் டெரர் ஆந்தம் பாடிய பவர்ஸ்டார்!

3 படத்தில் அனிருத் இசையில் தனுஷ் ஆங்கிலம் கலந்து எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி என்ற பாடல் ஹிட்டானதைத் தொடர்ந்து சிம்பு, விஷால் உள்ளிட்ட பல இளவட்ட நடிகர்களும் ஆங்கிலம் கலந்த பாடல்களை தங்கள் படங்களில் இணைத்து தாங்களே பாடியும் வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது பவர்ஸ்டாரும் சேர்ந்துள்ளார். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னாலதான் சிம்புவுக்கு ஆனந்த தொல்லை என்று டயலாக் பேசிய பவர்ஸ்டார், அழகன் அழகி படத்தில், சிம்புவின் லவ் ஆந்தம் பாணியிலேயே கையில் சித்தார் வைத்தபடி ஒரு டெரர் ஆந்தம் பாடியிருக்கிறார். அது மட்டுமின்றி சிம்பு போன்றே காஸ்டியூம் அணிந்து அவரை கலாய்த்துள்ளாராம். ஓ கேர்ள் மை வோல்டு என்ற தொடங்கும் அந்த பாடலை, யு-டியூப்பில் வெளியிட்டதில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பார்த்து வருகிறார்களாம். அந்த வகையில், விஜய், அஜீத் போன்ற நடிகர்கள் படங்களின் வீடியோக்களுக்கு இணையாக இப்போது பவர்ஸ்டாரின் பாடலையும் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்களாம். அதனால், இதுவரை பவரை காமெடியனாக பார்த்து கிண்டலடித்த கோலிவுட் நடிகர்கள், இப்போது அவரது வளர்ச்சியைக்கண்டு மிரண்டு போய் நிற்கிறார்கள். ஆனால் மற்றவர்களை அதிரடியாக கலாய்க்கும் பழக்கமுள்ள சிம்புவோ, தன்னையே இந்த பவர் கலாய்த்து விட்டாரே, இவருக்கு எந்தமாதிரி அட்டாக் கொடுக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்து வருகிறாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.