ஒன்பதுல குரு பாகம் இரண்டு விரைவில்..
வினய், லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்துள்ள படம் "ஒன்பதுல குரு". வருகிற 8ந் தேதி ரிலீசாகிறது. ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள். ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைப்பார். அவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி காமெடியாக கதை சொல்லும் படம். இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறாரநான்கு
நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள். அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும். அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம். முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம். ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார். புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம். நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலையாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.