சினிமாவில் சந்தானம் தான் எனக்கு போட்டி: சத்யன் பேட்டி!
சினிமாவில் எனக்கு ஒரே போட்டி சந்தானம் தான் என்று கூறியுள்ளார் நடிகர் சத்யன். ஹீரோவாக இருந்து காமெடியனாக மாறியவர் நடிகர் சத்யன். நண்பன் படம் கொடுத்த வெற்றி, நடிகர் சத்யனை எங்கோ கொண்டு சென்றுவிட்டது. தனக்கென ஒரு காமெடி டிராக்கை வைத்து கொண்டு தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார். இதனால் கைநிறைய படங்களை வைத்து கொண்டு பிஸி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமாவில் இந்தளவுக்கு முன்னேறி உள்ளேன். சினிமாவில் தொடர்ந்து இருந்தாலே போதும். நான் காமெடியனா நடிச்சதுல நடிகர் விஜய்க்கும் பெரிய பங்கு இருக்கு என்றார். மேலும் சினிமாவில் தனக்கு இருக்கும் ஒரே போட்டி நடிகர் யார் என்பது குறித்த கேள்விக்கு, வேறு யாரும் இல்லை; சந்தானம் மட்டும் தான். அவரை ஓவர் டேக் பண்ணணும் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.