செவ்வாய், மார்ச் 05, 2013

கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலுவை தாக்கியுள்ளார்

News Serviceஹீரோவாக தொடர நடிகர் வடிவேலுவுக்கு தைரியமில்லை என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். பாலாவின் நந்தா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். முதல்படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். காமெடி நடிகராக இருந்த அவருக்கும், ஹீரோவாகும் ஆசை வந்ததை தொடர்ந்து, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றுதந்ததை தொடர்ந்து, இப்போது அதிக படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் ஒருபடம் இருதினங்களுக்கு முன் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் கருணாஸ் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலுவை தாக்கியுள்ளார். வடிவேலு ஹீரோவாக நடிப்பை தொடருவது குறித்த கேள்விக்கு இப்படி அவர் பதிலளித்துள்ளார். அதாவது, காமெடியன் ஒருத்தன் ஹீரோவாவது சாதாரணம் இல்லை. அதை முதல் படத்தில் நிரூபித்த வடிவேலு, அடுத்த படம் தோல்வியடைந்ததும் ஹீரோவாக நடிப்பதில் பின் வாங்கிவிட்டார். தொடர்ந்து நான்கு படங்கள் ப்ளாப் கொடுத்த ஹீரோக்கள் கூட அடுத்த ஐந்தாவது படத்தில் வெற்றி கொடுக்க ஹீரோவாகத்தான் நடிக்கிறாங்க. ஆனால் வடிவேலுவுக்கு ஹீரோவாக தொடர தைரியமில்லை. அதேசமயம் அவர் சிறந்த நடிகர். இந்த இரண்டு வருஷம் அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், அவரோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் நடிக்காததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. என்னைப்போன்ற அவரது ரசிகர்களுக்கு தான் நஷ்டம் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.