ஞாயிறு, மார்ச் 03, 2013

சந்திரா மூலம் மீண்டும் திரையுலகில் வலம் வருவேன்: நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் ஸ்ரேயா!

News Serviceசிவாஜி கேர்ள் ஸ்ரேயாவின் மார்க்கெட் தற்போது டவுன்தான். என்றாலும், தமிழ், கன்னடத்தில் உருவாகியுள்ள சந்திரா படம் தன்னை மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு கொண்டு வந்து விடும் எனறு நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார். இந்த படத்தில் வழக்கம்போல் தொடை தட்டி மட்டுமே நடிக்காமல், முதன்முறையாக கத்தி சண்டையும் போட்டிருக்கிறார் ஸ்ரேயா. அப்படியொரு அட்டகாசமாக அதிரடியான இளவரசி வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். ரூபா அய்யர் இயக்கியுள்ள இப்படத்தில் பிரேம், வெங்கட்ராமன் என்ற கன்னட நடிகர்கள் நடித்திருந்தாலும், ஸ்ரேயாவை முன்வைத்தே தமிழில் இப்படத்துக்கான பப்ளிசிட்டியை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ப்படம் பற்றி ஸ்ரேயா கூறுகையில், இந்த News Serviceசந்திரா படத்தில் நான் இளவரசி வேடத்தில் நடித்துள்ளேன். அதற்காக என்னை அந்த காலத்து இளவரசி போலவே மாற்றி விட்டார்கள். வரலாற்று படம் என்பதற்காக இந்தியாவுக்குள்ளே படமாக்காமல், நியூசிலாந்த, நியூயார்க்கெல்லாம் சென்று படமாக்கியிருக்கிறார்கள். அதனால் இன்றைய ரசிகர்கள் விரும்பும் வகையில் படம் புதுமையாக வந்திருக்கிறது. அந்த வகையில், ராம்சரண்தேஜா, காஜல் நடித்த மகதீரா படம் போன்று இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் ஸ்ரேயா, இந்த படத்திலும் நான் கவர்ச்சிக்கும் பஞ்சம் வைக்கவில்லை. அரசர் காலத்து இளவரசி காஸ்ட்யூம்களில் புதிய கோணததில் எனது கிளாமரை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.