ஞாயிறு, மார்ச் 03, 2013

விஜய் படத்தில் இன்னுமொரு நாயகி: கடுப்பில் அமலா பால்

News Serviceஇயக்குநர் விஜய் - நடிகர் விஜய் கை கைகோர்த்துள்ள தலைவா படத்தில் மேலும் ஒரு நாயகியை புதிதாக சேர்த்துள்ளனர். அவர் ராகினி நந்வானி. டேராடூன் டைரி படத்திலும் சில டிவி தொடர்களிலும் நடித்தவர். இந்த திடீர் சேர்க்கையால் படத்தின் முதல் நாயகி அமலா பால் டென்ஷனாகியுள்ளாராம். இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் நடந்து வருகிறது. விஜய்யுடன் அமலாபால், பொன்வண்ணன் உள்பட பலர் முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் News Serviceஇந்தக் கதையில் ஒரே ஒரு ஹீரோயின்தானாம். ஆனால் கதையில் லேசான மாற்றம் செய்து, மும்பை செல்லும் விஜய் அங்கும் ஒரு பெண்ணை காதலிப்பது போல மாற்றியுள்ளார்களாம். இந்த வேடத்துக்குதான் ராகினி நந்வானி என்ற மும்பை நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய்க்குப் பிடித்த நாயகியாக இந்த ராகினி தேர்வாகியுள்ளது, அமலா பாலை டென்ஷனாக்கியுள்ளது. தமது காட்சிகள் குறைக்கப்பட்டு விடுமோ என்பதால் இந்த டென்ஷனாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.