ரஜினியின் பாராட்டை வென்ற தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள்..
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சு கதாநாயகியாக நடித்துள்ள படம் 'மறந்தேன் மன்னித்தேன்'. இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) ரிலீசாகிறது. இந்த படத்தை ரஜினிக்கு லட்சுமி மஞ்சு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டினார். இப்படம் பார்த்த ரஜினி மோகன்பாபு மகள் நடிப்பை வெகுவாக பாராட்டினார். இது குறித்து லட்சுமி மஞ்சு கூறும் போது, 'மறந்தேன் மன்னித்தேன்' படத்தை ரஜினி 'அங்கிள்' பார்த்தார். எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். அதோடு கதையும் சிறப்பாக இருந்ததாக வாழ்த்தினார். எனது தந்தை, மோகன்பாபுக்கு போன் செய்தும் படம் பற்றி பேசினார். தெலுங்கில் இப்படம் ஏற்கனவே ரிலீசாகி ஹிட்டாகியுள்ளது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.