ஞாயிறு, மார்ச் 17, 2013

இயந்திரங்கள் தான் இனி இசையமைக்கும்: இளையராஜா

தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு தெலுங்கில் "கொண்டேலு கோதாவரி" என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். கடந்த 8ம் திகதி வெளிவந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனை தமிழ் நாட்டைச் சேர்ந்த குமார் என்பவர் இயக்கி உள்ளார். ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு, சந்தீப் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் தெலுங்கில் ஹிட்டானது. இதன் பாடல் சிடிக்கள் ஒரு லட்சத்தை தாண்டி விற்பனையாகி உள்ளது. இதற்கான பிளாட்டினம் டிஸ்க்கை பெற்றுள்ளது. இதனை லட்சுமி மஞ்சு, டாப்ஸி ஆகியோர் இளையராஜாவிடம் வழங்கினர். பின்னர் இளையராஜா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் லைவ் மியூசிக் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இசை கலைஞர்களைவிட இசை கருவிகளை கொண்டே இசை அமைக்கப்பட்டு வருகிறது. லைவ் மியூசிக் எனக்கு பிறகு யாரும் செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லாஸ் ஏஞ்சல்சில் நான் நடத்திய கச்சேரியில் நூற்றுக் கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்றார்கள். இனி இதுபோன்ற கச்சேரியை நீங்கள் கேட்க முடியாது. காரணம் இனி இசை கலைஞர்களை கொண்டு யாரும் கச்சேரி நடத்த மாட்டார்கள். இதுதான் கடைசி கச்சேரி என்றேன். ரசிகர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள், இசைதான் மாறியிருக்கிறது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.