வியாழன், மார்ச் 14, 2013

'வெள்ளச்சி படம்' ஒரு பார்வை

News Serviceதந்தையால் சின்னா பின்னமாகும் ஒரு இளைஞனின் காதல்கதை.. பால் வியாபாரம் செய்பவர் செவ்வாளை. இவரது ஒரே மகன் பிண்டு. செவ்வாளை பல பெண்களுடன் தகாத உறவு வைத்து பணத்தை செலவிடுகிறார். இதை பிண்டு கண்டிக்கிறார். கள்ளக்காதலியின் கணவனிடமும் தந்தையை மாட்டி விடுகிறார். இதனால் இருவருக்கும் மோதல்.. அதே ஊரில் பிழைக்க வரும் சுசித்ரா உன்னியை பிண்டுக்கு பிடித்துபோக காதல்.. சுசித்ரா உன்னிக்கு பண உதவி செய்து படிக்க வைக்கிறார். பிண்டுவின் நல்ல குணம் சுசித்ரா உன்னியையும் காதல்பட வைக்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய எதிர்க்கின்றனர். காதலை பிரிக்க பிண்டு மீதான வன்மத்தை மனதில் வைத்து அவர் தந்தையே கொடூர திட்டம் வகுக்கிறார். அதன் பிறகு நடப்பது உயிரை உலுக்கும் கிளைமாக்ஸ்.. பாண்டுவின் மகன் பிண்டு நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். தந்தையின் கொடுமையில் சிக்கி ஆரம்பத்தில் அனுதாபம் அள்ளுகிறார். பிறகு ரியல் எஸ்டேட் அதிபராகி வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமும் காதலில் உயிர்ப்பும் காட்டுகிறார். வெள்ளச்சியாக வரும் சுசித்ரா உன்னி சிரிப்பும் முறைப்புமாய் வசீகரிக்கிறார். செவ்வாளை வில்லத்தனத்தில் குரூரம். சுசித்ரா உன்னி தந்தையாக வரும் கிருஷ்ணமூர்த்தி நேர்த்தி. நான்கு மனைவிகளின் கணவராக வரும் ரியல் எஸ்டேட் அதிபர் மதுமாறன் கலகலப்பூட்டுகிறார். பள்ளி ஆசிரியராக வரும் பாண்டு நிறைவு. கிராமத்து கதையை யதார்த்த முகங்களோடு விறுவிறுப்பாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர் வேலுவிஸ்வநாத். ஆரம்ப காட்சிகள் வலுவின்றி நகர்ந்தாலும் பிற் பகுதி கதை காதலும் மோதலுமாய் வேகம் பிடிக்கிறது. சாய் நட்ராஜ் ஒளிப்பதிவில் கிராமிய அழகு. பவதாரணி இசையில் பாடல்கள் இனிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.