சமந்தா
இப்போதெல்லாம், வாயைத் திறந்தாலே, பவர் ஸ்டாரைப் பற்றித் தான், மாய்ந்து மாய்ந்து பேசுகிறார். "பவர் ஸ்டார் மாதிரி, ஒரு நடிகரை, சிறந்த மனிதரை, நான் பார்த்தது இல்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல், படங்களை கொடுப்பதில், அவரை யாரும் அடிச்சுக்க முடியாது என, வார்த்தைக்கு வார்த்தை, பவர் ஸ்டாரை, பாராட்டி தள்ளுகிறார்." பவர் ஸ்டார் சீனிவாசனும், சமந்தாவும், ஒரு படத்தில் கூட, இணைந்து நடித்தது இல்லையே. சீனிவாசன் நடித்து, ஓரிரண்டு படங்கள் தானே, வெளியாகியுள்ளன. இப்படி இருக்கும்போது, பவர் ஸ்டாருக்கு, சமந்தா, ஏன் பாராட்டு மழை பொழிகிறார் என, சந்தேகம் வருகிறதா?
சமந்தா பாராட்டியது, "பவர் ஸ்டார் சீனிவாசனை அல்ல; தெலுங்கு நடிகர், பவன் கல்யாணைத் தான், பாராட்டி பேசியுள்ளார். தெலுங்கு திரையுலக ரசிகர்கள்,பவன் கல்யாணை, 'பவர் ஸ்டார்' என்று தான்,செல்லமாக அழைக்கின்றனர். அதை குறிப்பிட்டுத் தான், சமந்தா, இப்படி பேசியுள்ளார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.