இளையதளபதி விஜய் நடித்துவரும் படம் தலைவா.
இயக்குனர் விஜய் இயக்க, இளையதளபதி விஜய் நடித்துவரும் படம் தலைவா. இதன் ஷூட்டிங் கடந்த இரண்டு மாதமாக மும்பையில் நடந்து வருகிறது. விஜய்யுடன் அமலாபால், பொன்வண்ணன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். கதைப்படி விஜய்யின் தமிழ்நாட்டு காதலி அமலாபால். விஜய் ஒரு வேலை நிமித்தமாக மும்பை செல்ல, அங்கு அறிமுகமாகி ஒருவர் விஜய்யை காதலிப்பார். அதற்கு வடக்கத்திய முகத்துடன் ஒரு நடிகையை தேடிக் கொண்டிருந்தார்கள். ரிச்சா கங்கோபாத்யா, லட்சுமிராய் என சில பெயர்கள் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தெரிந்த முகமாக இருக்க வேண்டாம் என்று விஜய் சொல்ல அதன் பிறகு
தேடிப்பிடிக்கப்பட்டவர்தான் ராகினி நத்வனி. இவரை வடநாடு முழுக்கத் தெரியும். காரணம் பிரபலமான டி.வி தொகுப்பாளினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். "டெராடூன் டயரி" என்ற இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார். விஜய் மும்பையில் தங்கியிருந்தபோது அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவரைப் பார்த்த விஜய். வடநாட்டு பெண் கேரக்டருக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளரிடம் சொல்ல, இயக்குனரும் ஓகே சொல்ல அடுத்த நாளே கொண்டு வந்து நிறுத்தப்பட்டு விட்டாராம் ராகினி. இப்போது தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.