ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ள சூர்யா..
சிங்கம் 2 முடிந்த பிறகு சூர்யாவின் தேதி யாருக்கு..? இந்த கேள்வியோடு சூர்யாவைத் துரத்த ஆரம்பித்துள்ளனர் இயக்குநர்கள் கவுதம் மேனனும் லிங்குசாமியும். மாற்றானுக்குப் பிறகு சூர்யா நடித்துவரும் படம் சிங்கம் 2. ஹரி இயக்கும் இந்தப் படம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. அடுத்து இரு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார் சூர்யா. இதில் ஒரு படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். படத்துக்கு தலைப்பு துப்பறியும் ஆனந்தன். மற்றைய படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டு ஸ்க்ரிப்டோடு காத்திருக்கிறார் லிங்குசாமி. இருவருமே சூர்யா ரெடி என்றதும் ஷூட்டிங்
செல்லக் காத்திருக்கிறார்கள். எனவே யாருக்கு முதலிடம் தருவது என்பதில் சூர்யாவுக்கே பெரும் குழப்பமாக உள்ளதாம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, இரண்டு படங்களுக்கும் சமமாக தேதிகள் ஒதுக்கி ஒரே நேரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. இரண்டு கதைகளுமே நிச்சய வெற்றி என்ற நம்பிக்கை சூர்யாவுக்கு இருப்பதால், மாற்றானில் விட்டதை அடுத்தடுத்து ஹாட்ரிக் அடித்து சரிகட்டிவிடலாம் என்கிறாராம் தெம்போடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.