நடிகர்கள் கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது வித்தியாசமான அனுபவம் - ஸ்ருதி
நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஷால், தலைமையிலான, சென்னை ரினோ கிரிக்கெட் அணியின், பிராண்ட் அம்பசடராக, நடிகை ஸ்ருதி ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளாராம். இதையடுத்து, கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, சக நடிகைகளுடன், அவர் சமீபத்தில் ஐதராபாத் சென்றார். ஸ்ருதியுடன்,
அவரது தங்கை அக்ஷராவும் இருந்தார். அக்ஷரா எப்படி, இங்கே வந்தார் என, ஸ்ருதியிடம் கேட்டபோது, எனக்கு விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால், அக்ஷராவுக்கு, அதிக ஈடுபாடு உண்டு. அவள் கால்பந்து விளையாட்டின் தீவிர விசிறி. அனைத்து முக்கியமான போட்டிகளையும் பார்த்து விடுவாள். பிரபலமான அனைத்து வீரர்களின் பெயர்களும், அவளுக்கு தெரியும்.
இந்த போட்டியை பார்ப்பதற்காக, அவளையும் அழைத்து வந்தேன். ஆனால், மழை வந்து, எங்கள் ஆசையை கெடுத்து விட்டது. நடிகர்கள், கிரிக்கெட் விளையாடுவதை பார்ப்பது, வித்தியாசமான அனுபவமாக உள்ளது என, குதூகலிக்கிறார், ஸ்ருதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.