தனுஷின் கொலவெறிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் - சோனம் கபூர்
உலகையே கலக்கி எடுத்த கொலவெறி மற்றும் கங்கனம் ஸ்டைல் பாடல்களில் தனக்கு கொலவெறி பாடல் தான் ரொம்ப பிடிக்கும் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார். கொலவெறி பாடல் மூலம் உலகம் முழுக்க பிரபலமான நடிகர் தனுஷ், முதன்முறையாக பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனந்த்
எல்.ராய் இயக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனம் கபூர், தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தனக்கும் ரொம்ப பிடிக்கும் என்றும், உலகையே கலக்கிய கங்கனம் ஸ்டைல் பாடலை காட்டிலும் கொலைவெறி தன்னை ரொம்ப கவர்ந்ததாகவும், இதுபோன்ற பாடல்களே தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.