அமீரின் ஆதி-பகவன்" இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொலிவுட்டில் ‘அமீரின் ஆதி-பகவன்’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி, இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதி-பகவன் திரைப்படம் இந்து மதக் கடவுள்களை அவமதிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் காரணமாக பொலிஸ் கமிஷனர் அலுவலகம், முதலமைச்சர் தனி செல் பிரிவு மற்றும் தணிக்கைக் குழு ஆகியோரிடம் 100க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே எனது ‘ஆதி பகவன்’ திரைப்படம் ‘அமீரின் ஆதி-பகவன்’ என மாற்றப்பட்டு , ‘ஏ’ சான்றிதழுடன் இன்று வெளிவந்துள்ளது. ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘ஆரோ 3டி’ ஒலி அமைப்பில் ஆசியாவிலேயே இரண்டாவது திரைப்படமாக இன்று உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும், எனது திரைப்படத்திற்கு சில குழுக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்துக்காக ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கின்றனர். இருந்தாலும், குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.