செவ்வாய், பிப்ரவரி 19, 2013

உண்மைக்கு புறம்பான வகையில் உருவாக்கப்பட்டதே பாலச்சந்திரனின் புகைப்படங்கள் - இராணுவ பேச்சாளர்!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் காவலில் News Serviceஇருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சனல்4 ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரானவர்களின் திட்ட மிட்ட செயற்பாடுகளே இவை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலே இராணுவத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்படுகின்றன. இக்குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கு புதியதல்ல. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித உண்மையான ஆதாரங்களும் இல்லை. அவ்வாறான சில குற்றச்செயல்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. எனினும், போலியாக வெளியிடப்படும் இவ்வாறான புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வருடம் சனல்4 ஊடகம் வெளியிட்ட இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பான காணொளித் தடயங்களும் பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்ட படங்களையும் ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Professor Derrick Pounder, அவை போலியானவை அல்ல என்பதை நிரூபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.