செவ்வாய், பிப்ரவரி 19, 2013

யாழ்ப்பாணம் தீவகத்தின் வேலணை மண்கும்பான் பகுதியினில் ஈபிடிபி யினர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தீவகத்தின் வேலணை மண்கும்பான் பகுதியினில் இடம்பெற்ற கொள்ளை சம்பவமொன்று தொடர்பினில் ஈபிடிபி முக்கியஸ்தர் பசுபதி சீவரத்தினது மருமகனான டிலக்ஸன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவகத்தினில் ஈபிடிபி இலுவலகத்தினில் இணைந்து இந்நபர் பணியாற்றியும் வருகின்ற நிலையினில் மேல்மட்ட அறிவுறுத்தல்களையடுத்து விடயத்தை கிடப்பினில் போட முயற்சிகள் தொடர்வதாக தெரியவருகின்றது. வேலணை மேற்கு மண்கும்பான் ஜந்தாம் வட்டராத்தினில் தனித்து வாழ்ந்து வந்திருந்தவர்களான செல்லத்தம்பி தர்மலிங்கம்(85 வயது) மற்றும் அவரது மகளான குமாரசூரியர் ஜெயலக்சுமி (64வயது) வீட்டினிலேயே கடந்த 14ம் திகதி இக்கொள்ளை சம்பவம் நடந்திருந்தது. எனினும் முகமூடி அணிந்த இருவரே இக்கொள்ளையிலீடுபட்டதாகவும் அவர்கள் அருகாக வசித்து வரும் குறித்த நபர்களேயென பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டிருந்தது.சுமார் 12 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாகவும் கொள்ளை சந்தேக நபர்கள் தொடர்பாகவும் வழங்கப்பட்ட புகாரினையடுத்து பொலிஸார் மோப்ப நாய் சகிதம் நடத்திய தேடுதலையடுத்து சந்தேகமின்றி குற்ற நபர்களுள் ஒருவரான டிலக்சன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் முகமூடியாக பயன்படுத்தப்பட்ட துணி என்பவை மீடகப்பட்டிருந்தது.இதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.சம்பவம் தொடர்பாக கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருடன் ஈபிடிபியினரும் விசாரணைகளை நடத்தியிருந்தனர். எனினும் கொள்ளை சம்பவம் நடந்து மூன்று தினங்களாகியும் மற்றைய சந்தேக நபர் தொடர்பாகவோ கொள்ளையிடப்பட்ட நகைகள் தொடர்பாக தகவல்கள் அற்றேயுள்ளது.ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபரான ஈபிடிபி முக்கியஸ்தரும் பனை அபிவிருத்தி சபை தலைவருமான பசுபதி சீவரத்தினது மருமகன் டிலக்ஸன் பற்றியோ மற்றைய நபர் பற்றியோ இப்போது பொலிஸார் மௌனம் காத்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.