வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விடங்களை மக்களிடம் கையளிக்கவேண்டுமென வலியுறுத்தி நடைபெறவுள்ள உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும் அறிவித்தன. எதிர்வரும் 15 ஆந் திகதி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் நடத்துவதென வலிகாமம் வடக்கு மக்கள் மீளக் குடியமர்வு ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதற்குப் பொது அமைப்புக்கள் ஆதரவு வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதில் பங்குகொள்வார்களென கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமது கட்சியும் அதற்கு ஆதரவு வழங்குமெனவும், தாம் ஆதரவாளர்களுடன் அதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.