
இறுதி யுத்தத்தில் எவரும் காணாமல் போகவில்லை என்று பாதுகாப்பு செயலர் கருத்து வெளியிட்ட உடனேயே நான் அதை மறுத்து அனைத்து ஊடகங்களுக்கும் செய்தி வெளியிட்டிருந்தேன். இது உங்களுக்கு தெரியும். இந்த விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பு தலைவரது செய்தியை வீரகேசரி கேட்டு வாங்கி வெளியிட்டிருந்தது. இது வீரகேசரியின் முன் முயற்சியினால் நடந்தது. எனவே பாராட்டு வீரகேசரிக்குதான் வழங்கப்படவேண்டும். நான் உடனைடியாக மறுத்து பாதுகாப்பு செயலரின் சீற்றத்துக்கு ஆளாகி இருந்தாலும்கூட, கூட்டமைப்பு சார்பாக இது சொல்லப்படுவதுதான் சிறந்தது. கூட்டமைப்பில் யாரும் சொல்லவில்லையே என நான் ஆதங்கப்பட்டேன் . எனது ஆதங்க எதிர்பார்ப்பை இன்று நண்பர் சுரேஷ் காத்திரமாக பூர்த்தி செய்துள்ளார். இது இன உணர்வுகொண்ட எங்களை மகிழ்ச்சிபடுத்துகின்றது. உண்மையில் கூட்டமைப்பு மீது சமீப காலமாக கூறப்படும் விமர்சனங்களையும் சுரேஷ் தனது கருத்து மூலமாக தனியாக நின்று ஓரளவு தடுத்துள்ளார் என்று சொல்லவேண்டும். இதனாலேயே எமக்கு அவருடன் பணியாற்ற அவா ஏற்படுகின்றது இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இந்த கருத்தை கொழும்பிலிருந்து சொல்ல அவருக்கு நாம் பாதுகாப்பான மேடை ஏற்படுத்தியுள்ளோம். இது, சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்காத கூட்டமைப்பு மேடை அல்ல. இந்த உண்மையை நீங்கள் சொல்லாவிட்டால், இது ஏதோ கூட்டமைப்பு மேடை என ஜனம் நினைக்கும். எனவே உங்கள் செய்தியிலே நீங்கள் "அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம்" நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், கூட்டமைப்பு எம்பி சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டு ஊடக செய்தி வெளியிட வேண்டும். எனது முன்முயற்சியினால், சுரேஷ் (கூட்டமைப்பு) உட்பட நாம் அனைவரும் முன்னெடுக்கும் இந்த இயக்கத்துக்கு இன்று தேசிய, சர்வதேசிய அளவில் ஏற்பட்டு வரும் அங்கீகாரத்துக்கு, இது மேலும் வலு சேர்க்கும். அதேபோல் சும்மா இருக்கும் சோம்பேறிகளுக்கும் பதிலாக அமையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.