புதன், பிப்ரவரி 06, 2013

யாழ்.நகரக் காணிகளின் விலை 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு

யாழ்ப்பாண நகரில், காணிகளின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக, ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ‘எழுச்சிகாணும் யாழ்ப்பாணம்‘ என்ற தலைப்பில், கேபிஎம்ஜி மற்றும் ஆய்வு புலனாய்வு அலகு என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரில், ஒரு பரப்பு என்ற அழைக்கப்படும் 10 பேர்ச் காணியின் விலை சுமார் 7 மில்லியன் தொடக்கம் 8 மில்லியன் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெறுமதியை விட 10 மடங்கு அதிகமாகும். எனினும், யாழ்ப்பாணத்தில் கசூரினா மற்றும் காரைநகரில் கடற்கரையோர காணிகளை பரப்பு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யமுடியும். இந்தப் பகுதியில் காணிகளின் விலை விரைவிலேயே குறிப்பிடத்தக்களவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.