புதன், பிப்ரவரி 27, 2013

ஆஸ்கார் விருதை தவறவிட்ட பாம்பே ஜெயஸ்ரீ!

News Serviceஇந்தியாவை கதை களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட 'லைப் ஆப் பை' என்ற படம் ஆஸ்கார் விருதுக்கு 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இப்படத்தில் இந்தியாவை சேர்ந்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பாடல் பாடியுள்ளார். 'எவ்வரிபடி நீட்ஸ் ஏ பிரண்டு' என தொடங்கும் இப்பாடலுக்கு மைக்கேல் டன்னா இசையமைத்துள்ளார். இப்பாடலை மைக்கேல் டன்னாவுடன் இணைந்து பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் மறைந்த சித்தார் இசை மேதை ரவிசங்கரின் மகளுமான நூரா ஜோன்ஸ் ஆகியோர் பாடி இருந்தனர். இப்பாடலை பாடிய பாம்பே ஜெயஸ்ரீயை சிறந்த பாடகிக்கான ஆஸ்கார் விருது பட்டியலில் பரிந்துரைத்திருந்தனர். ஆனால், சிறந்த பாடகிக்கான விருது, ஜேம்ஸ்பாண்டு பாணியினால் ஆன ஸ்கைபால் படத்தில் பாடிய பாப் பாடகி அடெலி பெற்றார். இதனால் சிறந்த பாடகிக்கான விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீ ஏமாற்றம் அடைந்தார். சிறந்த பாடகிக்கான ஆஸ்கார் விருது பெற்ற அடெலி 24 வயதே நிரம்பிய இளம் பெண் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.