ரஜினின் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அவரது மகள் சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். மோசன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். சரத்குமார், நாசர், ருக்மணி நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இதற்கு பிறகு ராணா படத்தின் பணிகள் தொடங்குகிறது. அதற்கு அடுத்த ரஜினி படத்தை இயக்குவது மீண்டும் ஷங்கரா, ஏ.ஆர்.முருகதாஸா, எஸ்.எஸ்.ராஜமவுலியா என்ற கேள்விகள் இருந்தது. ஆனால் இப்போது ரஜினின் அடுத்த படத்தை இயக்குவது கே.வி.ஆனந்த் என்பது முடிவாகி உள்ளது. இதனை ஈராஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முதன்மை நிதிதுறை அதிகாரி கமல் ஜெயின் அந்த நிறுவனத்தின் மீடியா தளத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் நிறுவனம் ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது. தற்போது தயாரிப்பில் உள்ள கோச்சடையான்,
ராணா பணிகள் முடிந்ததும் எங்கள் படத்தின் பணிகள் துவங்கும். கோ புகழ் கே.வி.ஆனந்த் இயக்குகிறார். படத்திற்கான தலைப்பை இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினி கே.வி.ஆனந்துடன் பணியாற்றினார். கே.வி.ஆனந்தின் கேமரா கோணங்கள், லைட்டிங் சென்ஸ் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். "நாம் இருவரும் சேர்ந்து பணியாற்றலாம்" என்று அப்போதே ரஜினி கே.வி.ஆனந்திடம் கூறியிருந்தார். அவரும் ரஜினிக்காக அப்போதே ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டார். அதை படித்துப் பார்த்து விட்டு ரஜினியும் ஓகே செய்து விட்டார். என்றாலும் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய மாற்றான் படம் ஃபிளாப் ஆனதால் ரஜினி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பாரா மாட்டாரா என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது ஈராஸ் நிறுவன அதிகாரி. ரஜினியை கே.வி.ஆனந்த் இயக்குகிறார் என்பதை உறுதி செய்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.