விஜய் என் இளைய தம்பி - பவர்ஸ்டாரின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் போர்க்கொடி!
தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பவர்ஸ்டார் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவர் மோதிக் கொண்டனர். தமிழகத்தில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் கடந்த வாரம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைய தளபதி விஜய் என் இளைய தம்பி என்று பவர்ஸ்டார் அண்மையில் தெரிவித்திருந்போயும் போயும் பவர்ஸ்டார் எப்படி இளைய தளபதியை இளைய தம்பி என்று அழைக்கலாம் என்று அந்த முன்னணி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் ரசிகர் ஒருவர் ஆவேசப்பட்டுள்ளார். இதைக் கேட்டு அங்கிருந்த பவர்ஸ்டார் ரசிகர் ஒருவர் கொதித்துவிட்டார். ஏன் எங்க பவர்ஸ்டாருக்கு என்ன, அவருக்கு அப்படி சொல்ல தகுதி உள்ளது என்று பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர் மற்றும் பவர் ஸ்டார் ரசிகருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றி அலுவலகம் என்று கூட பார்க்காமல் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பிறகு சக ஊழியர்கள் வந்து விலக்கிவிட வேண்டியதாகிவிட்டது. இந்த சம்பவத்தால் அந்த அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.