செவ்வாய், பிப்ரவரி 05, 2013

ஜெனிவாவில் அமெரிக்காவின் பிரேரணையை ஆதரிக்க இந்தியா முடிவு?

இராஜதந்திரச் சமர் என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்­கைக்­கு எதிராக அமெரிக்க வல்லரசு கொண்டுவர­வுள்­ள பிரேர­ணையை இந்தியா இம்முறை ஆதரிக்குமென அறிய முடிகின்றது. ஜெனிவா இராஜதந்திரச் சமர் ஆரம்பமாவதற்கு முன்­னரே அங்கு சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை விட­யத்­­தில் டில்லியின் ஆதரவைப் பெறுவதற்கு வாஷிங்­ட­னும், கொழும்பும் கடும் பிரயத்தனங்களை மேற்­கொண்டுவரும் நிலையிலேயே இந்தத் தகவல் வெளி­யாகியுள்ளது. அதேவேளை, கடந்தமுறை இலங்கைக்கு எதிராக அமெ­ரிக்கா கொண்டுவந்த காட்டமான பிரேர­ணைை­ய வலுவிலக்கச் செய்த இந்தியா, இம்முறையும் இலங்­கைக்கு எதிரான பிரேரணையின் நகலை அமெரிக்­கா­வி­டம் கோரியுள்ளது என அறியமுடிகின்றது. அண்மையில் நடைபெற்ற இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் எட்டாவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் டில்லி சென்றிருந்தவேளை, ஜெனிவா பிரேர­ணையை தமது அரசு ஆதரிக்கவுள்ள விடயத்தை இந்திய அதிகாரிகள் கோடிகாட்டியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. கடந்தகால சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்தும்வரை தாம் சர்வதேசத்தின் பக்கம் நிற்கவேண்டிய நிலை உள்ளது என்றும் பீரிஸிடம் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்­ளனர். எனினும், தமது பக்க நியாயங்களைத் தொடர்ச்­சியாக இந்தியாவிடம் எடுத்துரைக்கும் இலங்கை அரசு, அந்நாட்டின் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.