இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை சுதந்திரம் அடைந்து 65ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று நாடெங்கிலும் நடைபெறுகின்றது. அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவர்களினால் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். எனினும் 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை திருகோணமலையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது. திங்கள், பிப்ரவரி 04, 2013
65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்
இலங்கையின் 65ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை சுதந்திரம் அடைந்து 65ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று நாடெங்கிலும் நடைபெறுகின்றது. அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது யாழ். வேம்படி மகளீர் கல்லூரி மாணவர்களினால் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். எனினும் 65 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இம்முறை திருகோணமலையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.