திங்கள், பிப்ரவரி 04, 2013

அரச காணிகளின் அதிகாரம் வடக்கு ஆளுநரின் கையில்

newsவடமாகாணத்தில் உள்ள அரசகாணிகள் அனைத்தையும் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந் திரசிறி. நாவற்குழியில் புதிதாக சிங்களக் குடியேற்றமொன்று அமைக் கப்பட்டுவரும் நிலையிலும், அரச காணிகளை படையினரின் பாவனைக்காக கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற்று வரும் நிலையிலும் அவசர அவசரமாக அரச காணிகளின் அதிகாரத்தை ஆளுநரின் கைகளில் ஒப்படைத்தமை தமிழ் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தி லுள்ள அரச காணிக ளின் பயன்பாடு தொடர் பாக நடவடிக்கைகளை முற்றுமுழுதுமாகத் தீர் மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமையவே இலங்கையின் வேறெந்த மாகாண ஆளுநருக்கும் இல்லாத இந்த அதிகாரம் வடமாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுநாள் வரையும் அரச காணி தொடர்பான நடவடிக்கைகளுக்கு குறித்த காணிகள் அமைந்துள்ள பகுதிக்குரிய பிரதேச செயலரே பொறுப்பாக இருந்து வந்தார். ஆயினும் தற்போது ஜனாதிபதியின் விசேட ஆலோசனையின் படி வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலர்களிடமிருந்த இந்தப் பொறுப்பு திடீரென ஆளுநரின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தல் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்களுக்கும் மற்றும் பிரதேச செயலர்களுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை குறித்த அதிகார மாற்றம் தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் நேற்று மாலை வரை அவை கிடைக்கவில்லை என்று பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.