குறுந்தகவலூடான போலி லொத்தர் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்
குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) சேவையூடாக செயற்படுத்தப்படும் போலி லொத்தர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில தனியார் கம்பனிகள், குறுந்தகவல் ஊடாக அல்லது தொலைபேசி அழைப்பின் ஊடாக தனியாட்களை அழைத்து அவர்கள் பெறுமதியான பரிசுகளை வென்றுள்ளதாகவும் ஆரம்ப செலவாக பெயர், குறித்த வங்கிக் கணக்கில் குறித்தளவு நிதியை வைப்பு செய்யும்படியும் கூறுகின்றன. இவ்விதமான ஏமாற்று வேலைகளை பொதுமக்கள் அறிந்துகொண்டு அது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொலைபேசி நிறுவனங்கள் உண்மையிலேயே சீட்டிழுப்புகளை நடத்தி வாடிக்கையாளர்களுக்கு பரிசு வழங்கும்போதும் இவ்வாறான ஏமாற்று வேலைகள் நடைபெறுகின்றன. வெற்றியாளர்களுக்கு அனுப்பப்படும் செய்திகளை அறிந்துகொள்ளும் இக்கூட்டம் அவர்களுக்கு போலி செய்திகளை அனுப்பி மேலே கூறிய வகையில் பணம் கறக்கின்றனர். இவ்வாறான மோசடிகளில் அகப்பட்டுகொள்ள வேண்டாமெனவும் சந்தேகம் ஏற்படும்போது பொலிஸாருக்கு தகவல் தரும்படியும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.