சனி, பிப்ரவரி 23, 2013

தினம் ஒரு இயக்குனர் வீட்டிற்கு செல்லும் சாயாசிங்!

News Serviceதனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் தமிழுக்கு வந்தவர். அப்படத்தில் மன்மதராசா என்ற பாடலுக்கு தனுசுடன் சேர்ந்து அதிரடியாட்டம் போட்ட சாயாசிங், அதைத்தொடர்ந்து அதிரடி நடிகையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் பின்னர் சில சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே காணாமல் போனார். கடைசியாக ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தில் நடித்த சாயா, அடுத்தபடியாக டைரக்ட் பண்ணப்போகிறேன் என்று ஸ்கிரிப்ட் எழுதி வந்தார். ஆனால் அவரை நம்பி படத்தை தயாரிக்க படாதிபதிகள் யாரும் முன்வரவில்லையாம். அதனால் மீண்டும் நடிக்கப்போகிறேன் என்று ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை. ஆனால், அவர் சான்ஸ் கேட்க சென்ற இடங்களில் எல்லாம் ஹீரோயினி சான்ஸ் தர மறுத்து விட்டார்களாம். அதனால் வேறுவழி தெரியாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்திருக்கிறார் சாயாசிங். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலின் காதல், ஹன்சிகா நடிக்கும் வாலிபன் ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கிறார். இதையடுத்து பரவலான படங்களை கைப்பற்ற கோடம்பாக்கத்தில் முகாமிட்டுள்ள சாயா, சில முன்னணி இயக்குனர்களை தினம் ஒருவர் வீதம் நேரில் சந்தித்து தனது மறுபிரவேசம் குறித்து தெரியப்படுத்தி, சான்ஸ் கேட்டு அப்ளிகேசன் போட்டு வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.