நயன் சீதையாக நடிக்கும் போது நான் ஏன் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க கூடாது? - வித்யாபாலன்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். இந்த படத்தில் சில்க் வேடத்தில் நடித்திருந்தார் வித்யாபாலன். அதில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு கடந்த ஆண்டின் சிறந்த நடிகைகான தேசிய விருதுகூட கிடைத்தது. இதனால் ஆபாசமாக நடித்திருக்கிறார் என்று வித்யாபாலனை விமர்சித்து வந்தவர்கள்கூட அதன்பிறகு வாயடைத்து போயினர். இந்நிலையில், தற்போது கர்நாடக இசைப்பாடகியான எம்எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜீவ்மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் வித்யாபாலன். இதற்கும் வழக்கம்போலவே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடுப்பான வித்யாபாலன், ஒருவரது வாழ்க்கை வரலாறை படமாக்க நினைக்கும்போது, அதற்கு பொருத்தமான நடிகையைத்தான் இயக்குனர்கள் தேர்வு செய்வார்கள். அதிலும் நான் சில்க் வேடத்தில் சிறப்பாக நடித்ததால், அந்த நம்பிக்கையில் இந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இதில் நான் நடிக்கக்க்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. கோடான கோடி எம்எஸ்.சுப்புலட்சுமியின் ரசிகைகளில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கிறார். மேலும், எத்தனையோ நடிகைகள் தெய்வங்களின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அவர்களை மட்டுமே ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை. நயன்தாராகூட ஒரு தெலுங்கு படத்தில் சீதையாக நடித்திருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு கிறிஸ்தவ பெண். ஆனால் அதை யாரும் எதிர்க்கவில்லையே. மாறாக, ஏற்றுக்கொண்டார்களே. அப்படியிருக்க, நான் ஏன் எம்.எஸ் வேடத்தில் நடிக்கக்கூடாது என்றும் கேள்வி கேட்டுள்ளார் வித்யாபாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.