திங்கள், பிப்ரவரி 25, 2013

இசைப்புயலின் இயக்குனர் அவதாரம்..

News Serviceஉலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், விரைவில் இயக்குனராக அவதரிக்க இருக்கிறார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதரித்த ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் தனது இசையால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த ரஹ்மான், ஹாலிவுட்டிலும் கால்பதித்தார். இரண்டு ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள் உள்ளிட்டவைகளை குவித்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளராக இருந்து வரும் ரஹ்மான் விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயார் செய்து, அதை இயக்கவும் உள்ளார். இதுகுறித்து ரஹ்மானின் நண்பர் ரசூல் பூக்குட்டி கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும்போது ரஹ்மான் படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டார். இந்த கதை தொடர்பாக நானும், அவரும் பலமுறை விவாதித்து உள்ளோம். இந்தியில் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு சில நடிகர், நடிகையிடம் பேசியுள்ளோம். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.