சனி, பிப்ரவரி 23, 2013

ஹைதராபாத்தில் நான் பத்திரமாக உள்ளேன், யாரும் கவலைப்பட வேண்டாம் - சிம்பு

News Serviceஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தான் பத்திரமாக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.