வெள்ளி, பிப்ரவரி 22, 2013

ஸ்ரீகாந்தும் கைவிரித்து விடுவாரோ? என்ற கவலையில், மிஷ்கின்

News Serviceமிஷ்கின் இயக்கிய சில படங்கள் அவரை சொல்லி சொல்லி அடித்து விட்டதால், எகிறி நின்ற அவரது மார்க்கெட்டும் டமார் என்று உடைந்து நொறுங்கி கிடக்கிறது. அதன்காரணமாக, அடுத்து பெரிய ஹிட் கொடுத்து மீண்டும் எழுந்து நின்று விட வேண்டும் என்று நினைத்த அவர், ஒரு வித்தியாசமான கதையை தயார் செய்து சில பட நிறுவனங்களை News Serviceஅணுகினார். ஆனால் கதை கேட்க யாருமே காது கொடுக்கவில்லை. அதையடுத்து சில மேல்தட்டு ஹீரோக்களை சந்தித்தார். நலம்குலம் விசாரித்தவர்கள், கதை சொல்ல இவர் வாயெடுத்ததும், அப்ப வரட்டுமா? ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று கைகுலுக்கி விட்டு எஸ்கேப்பானார்கள். இதனால் மனசொடிந்துப்போன News Serviceமிஷ்கின், சோதனைகளை சாதனைகளாக்கிக்காட்டுகிறேன் என்று இப்போது சொந்த படம் எடுக்கும் முயற்சியில இறங்கியிருக்கிறார். லோன் ஓல்ப் என்ற தனது புதிய பட நிறுவனத்திற்காக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார் மிஷ்கின். இந்த படத்தில் நடிப்பவர்கள் யார் யார்? என்று விசாரித்தபோது, புதுமுகங்களே என்றார்கள். ஆனால் மிஷ்கினோ, ஓரளவாவது பெயர் தெரிந்த நடிகரை வைத்து படம் பண்ணுவோம் என்று இப்போது ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சில நடிகர்களை அழைத்து பேசிக்கொண்டிருக்கிறார். என்னிடம் வெயிட்டான கதை உள்ளது அதனால் வெயிட்டான நடிகர் தேவையில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரை சந்தித்து வந்த ஸ்ரீகாந்தோ அதன்பிறகு இன்னமும் எஸ் ஆர் நோ சொல்லவில்லையாம். விளைவு, ஸ்ரீகாந்தும் கைவிரித்து விடுவாரோ? என்ற கவலையில், கடவுளிடம் கருணை மனு போட்டுக்கொண்டிருக்கிறார் மிஷ்கின் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.