வாய்ப்பு தேடி வந்த திவ்யாவை கண்டுகொள்ளாத தமிழ் சினிமா..
சிம்புவுடன், குத்து படத்தில் அறிமுகமான ரம்யா, அதற்கு பின், தன் பெயரை, ஸ்பந்தானா என, மாற்றிக் கொண்டார். வாரணம் ஆயிரம், பொல்லாதவன் ஆகிய படங்களில், அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தாலும், அதற்கு பின், தமிழில் வாய்ப்புகள் இல்லை. இதனால், கன்னட படங்களில் மட்டும் நடித்து வந்த திவ்யாவுக்கு, திடீரென அரசியல் மீது ஆர்வம் வந்ததால், கர்நாடகா அரசியல்
களத்தில் கால் பதித்தார். அரசியலில் தீவிரமாகவுள்ள நடிகையை, படத்தில் நடிக்க வைத்தால் பிரச்சினை வருமே என, நினைத்த, இயக்குனர்கள், திவ்யாவுக்கு வாய்ப்பு தர, தயங்கினர். இதையடுத்து, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வந்த அவர், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், ஹீரோக்களை சந்தித்து, நடிக்க வாய்ப்பு தரும்படி கேட்டாராம். ஆனால், யாருமே பாசிடிவ்வான பதில் கூறாததால், ஏமாற்றத்துடன், மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று விட்டாராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.