ஹலால் உணவைப் புறக்கணிக்குமாறு சிறிலங்காவின் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பலசேனா அமைப்பு கோரியுள்ளது மீண்டும் மதரீதியான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மகரகமவில் நேற்று நடந்த பொதுபலசேனா அமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்து சிறுபான்மையினரிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது. நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் பொதுபலசேனா எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்றும், எனவே உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும், பொதுபலசேனாவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக, வர்த்தக நிலையங்களில் இருந்து ஹலால் உணவுப்பொருட்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில், 90 வீதமானோர் பௌத்தர்களாகவும், இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ள நிலையில், ஹலால் உணவுகளை உண்ண வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பது நியாயமற்றது என்று பௌத்த பிக்குவான கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரகடனத்தில் ஹலால் சான்றிதழ் உடனடியாக தடை செய்யப்படல் வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெரும் நிதி மூலம் பள்ளிவால்களை நிர்மாணிப்பதை தடை செய்தல், சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து மத போதனைகளில் ஈடுபடுவோரை மார்ச் 17 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற்றுதல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்தல், சிங்கள சனத்தொகை அதிகரிப்பில் உள்ள தடங்கள்களை நீக்குதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. திங்கள், பிப்ரவரி 18, 2013
முஸ்லிம்களுக்கு எதிராக அறைகூவல் விடும் பொதுபலசேனா
ஹலால் உணவைப் புறக்கணிக்குமாறு சிறிலங்காவின் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பலசேனா அமைப்பு கோரியுள்ளது மீண்டும் மதரீதியான பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மகரகமவில் நேற்று நடந்த பொதுபலசேனா அமைப்பின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்து சிறுபான்மையினரிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது. நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு மத போதகர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் பொதுபலசேனா எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபைகளே காரணம் என்றும், எனவே உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும், பொதுபலசேனாவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக, வர்த்தக நிலையங்களில் இருந்து ஹலால் உணவுப்பொருட்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில், 90 வீதமானோர் பௌத்தர்களாகவும், இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ள நிலையில், ஹலால் உணவுகளை உண்ண வேண்டும் என்று அவர்களை நிர்ப்பந்திப்பது நியாயமற்றது என்று பௌத்த பிக்குவான கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரகடனத்தில் ஹலால் சான்றிதழ் உடனடியாக தடை செய்யப்படல் வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெரும் நிதி மூலம் பள்ளிவால்களை நிர்மாணிப்பதை தடை செய்தல், சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து மத போதனைகளில் ஈடுபடுவோரை மார்ச் 17 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற்றுதல், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவதை தடை செய்தல், சிங்கள சனத்தொகை அதிகரிப்பில் உள்ள தடங்கள்களை நீக்குதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.