திங்கள், பிப்ரவரி 18, 2013

மகிந்த அரசாங்கத்தின் இறுதி இரண்டு மாதங்கள்? மகிந்த அரசாங்கத்தின் இறுதி இரண்டு மாதங்கள்?

. அரசாங்கம் இறுதி இரண்டு மாதங்கள் தற்போது நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பொருளாதார பிரச்சினைகளை அரசாங்கம் பொறுப்பேற்காமல், அதனை நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி ஜெயசுந்தரவிடம் சாட்டியுள்ளது.அதேபோன்று முதலீட்டுகளின் நெருக்கடி நிலையும் தற்போது வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமக்கு தெரிந்த அளிவில் தமது இறுதி இரண்டு மாதங்களை தற்போது தற்போது அரசாங்கம் கழித்து வருவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இந்த நிலைமையில் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாமல், அவர்கள் பிரச்சினைகளில் இருந்து மீட்க முயற்சிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.