தமிழகத்தில் இறை வழிபாட்டிற்குச் சென்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.கே.பி. கேமேஜ் சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் அபிராமியம்மன் ஆலயத்திற்கு சென்றுள்ளார். அவர் தரிசனத்திற்கு வந்ததையும் ஆலய விடுதியில் தங்கியிருந்ததையும் அறிந்த தமிழகக் கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விடுதி முன்பு திரண்டு எம்.பி க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரை தரிசனம் செய்ய விடாது கடும் எதிர்ப்பு நிலவியதால் திருக்கடையூரில் காவற்றுறையினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.