வியாழன், பிப்ரவரி 21, 2013

பலாலி விமானத்தள விஸ்தரிப்புக்கு காணிகள் சுவீகரிக்கப்படவில்லை; யாழ்.அரச அதிபர் கூறுகிறார்

பலாலி விமானப்படைத்தள விஸ்தரிப்புக்கு காணிகள்news சுவீகரிக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.ஆயினும் அதற்குரிய நடவடிக்கைகள் முழுமைபெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் கட்டத்தை எட்டியிருப்பதாக மாவட்ட செயலகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய பிரதேசங்களில் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார். விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டபோது, பலாலி விமானப்படைத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் என்பன விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சிவில் நிர்வாக அடிப்படையில் மேற்படி சுவீகரிப்பு நடவடிக்கைகள் உங்கள் தலை மையிலான அரச அதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகள் ஏதாவது மேற் கொள்ளப்படுகின்றனவா என்று கேட்கப்பட்டது. அவ்வாறு எந்தவொரு நடவடிக்கைகளும் தன்னால் மேற்கொள்ளப்படவில்லை என அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பதிலளித்தார். ஆனாலும் பலாலி விமானத்தளம் விமானப்படையினராலேயே சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்குரிய சகல ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு நஷ்டஈடு வழங்கும் நிலையிலேயே தற்போதுள்ளது. மேலும் இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் 1987 ஆம் ஆண்டே வெளியிடப்பட்ட தாகவும் மேற்படி மாவட்ட செயலகத்திலுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.