வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடமிருந்து அரசினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டை அரசாங்கம் வழங்க முயன்றாலும் அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் அதனைப் பெற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கின்றனர் என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல் காரணமாகவே இந்த நிலை எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, சம்பந்தப்பட்ட மக்கள் தங்களுக்கான நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ள மறுப்பதுடன் தங்களது காணிகளை மீள வழங்க வேண்டுமென தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுக்கின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபை மற்றும் முதலீட்டுச் சபைகளின் தேவைகளுக்காக சம்பூரில் அரசினால் 698 ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுக்கான நஷ்டஈட்டைப் பெற காணி உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர். அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு தடையை ஏற்படுத்தும் முயற்சியாகவே குறித்த பாரளுமன்ற உறுப்பினர் மக்களை இவ்வாறு அறிவுறுத்தி உள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.