புதன், பிப்ரவரி 20, 2013

பாலச்சந்திரன் கொலை; புகைப்படத்தின் பின்னணியில் புலிகளின் ஆதரவு சக்திகளாம்

பாலச்சந்திரன் கொலை புகைப்பட வெளியீட்டின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் ஆதரவு சக்திகள் இருப்பதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் புலிகள் ஆதரவு சக்திகள் இருக்கின்றன. மேலும் இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் ஏதுமில்லை. இலங்கை அரசு மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றங்கள் கூறுவது வாடிக்கையாகிவிட்டது’ என்று அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.