
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, யாழ்.நகரிலும், பலாலியிலும் சிறிலங்கா படையினரின் புதிய நிரந்தர முகாம் மற்றும் கேளிக்கை விடுதி என்பனவற்றை திறந்து வைத்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அவர் நேற்றுமுன்தினம் சுன்னாகத்தில் மின் நிலையம் ஒன்றையும், நயினாதீவு செல்லும் சிங்கள யாத்திரிகர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட இறங்குதுறையையும், நேற்று யாழ்.போதனா மருத்துவமனைக்கு ஜப்பானிய நிதியுதவியில் அமைக்கப்பட்ட பலமாடி சத்திரசிகிச்சைக் கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்தார். அதேவேளை, இவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, யாழ்.குடாநாட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய நிரந்தரப் படைமுகாம்களைப் பார்வையிட்டார். யாழ். குடாநாட்டில் தற்போது சிறிலங்கா படையினர் சீனாவில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஆயத்தநிலைக் கட்டடங்களைப் பயன்படுத்தி, புதிய நிரந்தர முகாம்களை அமைத்து வருகின்றனர். யாழ்.நகரில், சிங்கள மகாவித்தியாலயக் காணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறிலங்காப் படைமுகாமையும் நேற்றுமுன்தினம் கோத்தாபய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.