நாவற்குழியில் சிங்களவர்கள் வசிப்பதற்கும், தெற்கு சிங்களவர்கள் வந்துபோகவும் இடம் கொடுக்கும் படையினர் அங்கு இருக்கும் தமிழ் மக்களை துரத்தியடித்துவருவதாக முறைப்பாடு செய்துள்ளனர். உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளதால் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிய தாக அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனரஇரவில் வரும் தென்னிலங்கை வாசிகளுக்கு இடம் கொடுக்கும் படையினர் பகலில் கொட்டில் அமைக்கச் செல்லும் யாழ்.மாவட்டத்தில் நிரந்தரக் காணியில்லாத குடும்பங்களை விரட்டுவதாகப் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.நாவற்குழியில் உள்ள வீடமைப்புத் திணைக்களத் துக்குச் சொந்தமான காணியில் குடியமரச் செல்லும் யாழ்.மாவட்ட மக்களே இவ்வாறு துரத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. முதல் நாள் அங்கு காணி பார்வையிடச் சென்ற தென் மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அங்கு குடியிருக்கக் கூடிய ஒரு இடத்தைப் பார்வையிட்டுத் தெரிவு செய்தது. அதன் பின்னர் மறுபடியும் குடிசை அமைப் பதற்காக அங்கு சென்ற வேளையில், அந்த இடத் தில் சிங்களக் குடும்பம் குடியமர்த்தப்பட்டுள்ளதாகப் படையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து குடிசை அமைப்பதற்கு வேறு இடம் பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த படை யினர் கொட்டில் போட வேண்டாமென உயர் அதி காரி உத்தரவிட்டுள்ளதால் அங்கிருந்து வெளியேறு மாறு கூறியதாக அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.சம்பந்தப்பட்ட குடும்பம் நேற்றுப் புதன்கிழமை தென் மராட்சிப் பிரதேச செயலகத்தில் அப்பகுதி கிராம அலுவலரிடம் முறைப்பாடு செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.