எம்.ஜி.ஆர்,ரஜினி படங்களில் நடித்த யானை மரணம் .
எம்.ஜி. ஆர், .ரஜினிகாந் உள்ளிட்ட பிரபலங்களின் திரைப்படங்கர் பலவற்றில் நடித்த ரதி என்ற யானை தøது 81 ஆவது வயதில் மரணமடைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் யானை குழியில் தவறி விழுந்த குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு ரதி என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது இந்த யானைக்கு 81 வயது ஆகி யுள்ளது. இந்த யானை மொத்தம் 13 குட்டிகளை ஈன்றது. பாசம் நிறைந்த இந்த ரதி யானைக்கு முதுமலையின் மூதாட்டி என்ற பெயரும் சூட்டப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி இந்த ரதி யானை, எம் .ஜி.ஆர்.நடித்த நல்லநேரம், ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் மற்றும் கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 10 க்கும் மேற்பட்ட சினிமாப்படங்களிலும் நடித்துள்ளது. இந்த யானைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படுக்கையில் கிடந்த இந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த புதன்கிழமை திடீரென யானை மரணம் அடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.