வியாழன், ஜனவரி 24, 2013

மதவாதமோ அல்லது அடிப்படை வாதமோ பரப்பப்படுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதா

இலங்கையில் எந்தவொரு மதத்தின் மூலமாவது மதவாதமோ அல்லது அடிப்படை வாதமோ பரப்பப்படுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதா? அவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா? என அனுர திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பினார். யுத்தத்தின் கசப்பான அனுபவங்களை மறக்காத சூழ்நிலையில் நாட்டில் இனவாத, மதவாத மோதல்கள் ஏற்பட்டால் பயங்கரமான நிலை உருவாகுமென்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையியற் கட்டளை 23 இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.