யுத்தம்இல்லாதஇக்காலப்பகுதியிலபல்வேறுகாரணங்களால்பாதுகாப்புப் படைகளிலிருந்து வீரர்கள் தப்பிச் செல்கின்றனர். எனினும் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது விபரங்களை வெளியிட முடியாது என அரசாங்கம் இன்று சபையில்
தெரிவித்தது.அத்துடனஇடம்பெற்றுவரும்அனைத்து குற்றச் செயல்களுக்கும் தப்பிச்சென்ற பாதுகாப்புப் படையினரை குற்றம் சுமத்த முடியாது என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி எம்.பி. அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.படையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுவருகின்ற அதேவேளை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.