
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் புதல்வரான எம். கே. ஸ்ராலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட்டை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு , ஐ.நா சபை விவகாரம் உட்பட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தி.மு.க வின் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தவிர இலங்கை தமிழர்களின் ஆதரவு அமைப்பான 'டெசோ" வை சேர்ந்த பிரதிநிதிகள் நாளை மற்றும் நாளை மறுதினம், தலைநகர் புது டெல்லியில் உள்ள பல வெளிநாட்டு துதுவராலயங்களுக்கும் விஜயம் செய்து இந்த விடயம் குறித்து ராஜதந்திரிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தினால் இலங்கை தமிழர் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைப்பர் என திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ரீ.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.