உதயன் பத்திரிகையிடம் 1,000 கோடி நட்டவீடு கேட்கும் டக்ளஸ்: சமரசத்துக்கு நீதிபதி ஆலோசனை!
யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் பத்திரிகைக்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்காக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார். தனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச் செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடுத்த ஆயிரம் (1,000) கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆனந்தராஜா அவர்கள் முன்பாக தனது சிரேஷ்ட வழக்கறிஞர் அப்துல் நஜீம் சட்டத்தரணி டி.ரெங்கன் அவர்களின் அனுசரணையுடன் முன்னிலையானார். உதயன் பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் அதன் ஆசிரியர் பிரேமானந்த் தனது வழக்கறிஞர் ஊடாக தோன்றியதுடன் இவ்வழக்கினை சமரசத்திற்கு கொண்டுவர அமைச்சர் அவர்களின் விருப்பம் குறித்து மாவட்ட நீதிபதியினால் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உதயன் பத்திரிகையானது தன் மீதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக தொடர்ச்சியாக விஷமத்தனமான ஆதாரமற்ற பொய்ச் செய்திகள் பிரசுரிக்கின்றன. முதலில் உதயன் பத்திரிகை நிறுவனத்தினர் எனதும் எனது கட்சி மீதும் மேற்கொள்ளப்பட்ட களங்கம் கற்பிக்கும் அவதூறு செய்திகளுக்காக நீதிமன்றின் முன் தோன்றி தமது தரப்பு நியாயத்தை தெரிவிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். அதன் பின்னர் சமரசம் குறித்து என்னால் சிந்திக்க முடியும் எனவும் கூறினார். இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி ஏ.ஆனந்தராஜா அவர்கள் இவ்வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்று விசாரணை தொடரும் என அறிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.