
ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக 27 அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்க நாடு ஒன்றும் செயற்படவுள்ளன என்று அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக திவய்ன ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆபிரிக்கா நாடொன்றும் இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் திரட்டிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர். சம்பந்தன் தலைமையிலான குழுவொன்றும் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்கா புறப்படவுள்ளதாகவும் அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.